முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனிநபர்களுக்கு உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் அப்பகுதி கிராம பஞ்சாயத்து தலைவர், வாகன நிறுத்த கட்டணம் வசூலித்து வருவதாக கூறி, ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சேஷபுரீஸ்வரர் கோயில் இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த, பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிப்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது என உத்தரவிட்டது.

மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை!

Saravana

ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு

Web Editor

ஒரு டீ விலை 180 ரூபாய் – வேதனையில் இலங்கை மக்கள்

Web Editor