செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ்

செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை  என  நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் …

செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை  என  நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில்  நடிகர் சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர் , பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ஏப்ரல் 14ம் தேதி  வெளியாகியுள்ளது. திரில்லர் படமாக வெளியாகியுள்ள இப்படம் சினிமா ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கோவை கே.ஜி. காம்பளக்ஸில் உள்ள அனுபல்லவி திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் இருக்கைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்திந்த அவர் தெரிவித்ததாவது..

” நாம் அனைவருமே செல்போனில் அதிக நேரம் செலவழித்து வருகிறோம். இதனால்  பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவரின் கதைதான் ருத்ரன் படத்தின் கரு. செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு நாம் கொடுப்பதில்லை.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனது சேவை நிறுவனத்திற்கு  நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகிறது. அப்பா அம்மாவிடம் நாம் அதிக அளவில் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் குடும்பங்கள் அதிகமாக வர தொடங்கியதுதான்.

ஒரு திருமண விழாவிற்கு சென்றபோதுதான் இந்த ஜொர்தாலா பாட்டை கேட்டேன், பிடித்திருந்தது. அதனால்தான் இப்பாடலை படத்தில் வைத்திருக்கிறோம். ஒரேமாதிரி கதைகள் பண்ணா நமக்கே போர் அடிக்கும். சந்திரமுகி-2, ஜிகர்தண்டா-2  போன்ற படங்களில் தற்போது நடித்து கொண்டிருக்கிறேன். சந்தமுகி -2 படத்தில்  முழுக்க முழுக்க இயக்குநர் பி.வாசுவை நம்பியுள்ளேன்.” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.