இந்திய வம்சாவளி சார்ந்த தொழிலதிபரான பங்கஜ் சுவிட்சர்லாந்தில் சுமார் ரூ.1649 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டில் வசித்து வருகிறார்.
தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால் தனது மனைவி ராதிகாவுடன் இணைந்து சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடு உலகின் விலையுயர்ந்த் 10 வீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த வீடு கிரேக்க கப்பல் அதிபர் அரிஸ்டாட்டில் ஓனாசிஸ் என்பவரின் மகளுக்கு சொந்தமானது. பின்னர் இந்த சொகுசு மாளிகை ஜெஃப்ரி வில்க்ஸ் என்பவரால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. இவர் ஓபராய் மற்றும் லீலா ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தவர்.சுமார் 40, 000 சதுர அடி பரப்பளவில் சுவிட்சர்லாந்தின் ஜிங்கின்ஸ் கிராமத்தில் இந்த வீடு அமைந்துள்ளது.
பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வாலின் சொத்து மதிப்பு சுமார் 3 பில்லியனுக்கும் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இவர் தனது இரு மகள்களுடன் புதிய வீட்டில் வசித்து வருகிறார். நிதித்துறையில் சிறந்து விளங்கிய மகள் வசுந்தரா, பின்னர் பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் மினரல்ஸ் நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார்.





