நிலக்கரி பற்றாக்குறை -தேவையற்ற அச்சம்; மத்திய அமைச்சர்

நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். நிலக்கரி உடனடியாக கிடைக்கவில்லையெனில் ஓரிரு நாட்களில் தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று…

நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி உடனடியாக கிடைக்கவில்லையெனில் ஓரிரு நாட்களில் தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இது இயற்கை எரிவாயு பரிமாற்ற நிறுவனம் மற்றும் டாடா நிறுவனங்களுக்கிடையேயான தவறான தகவல் பரிமாற்றத்தால் இந்த அச்சம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல நம்மிடம் போதுமான அளவில் எரிபொருள் உள்ளது. இதனைக்கொண்டு நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி தொடர்ந்து நிலக்கரி விநியோகத்தை பெறும் என்றும், இதில் எவ்வித கட்டண மாறுபாடுகளும் இருக்காது என்றும் இதனால் மின் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத் தேவையை அனல் மின்நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வழங்கும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் மழை காரணமாக நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியில் தொடர் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி முதலமைச்சர் என்னிடம் பேசியிருக்க வேண்டும், நேற்று டெல்லி ஆளுநர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் நிலக்கரி விநியோகத்தில் தடையிருக்காது என உறுதியளித்தேன். நம்முடைய அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.