பங்குனி மாத பூஜை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு  திருவிழாவையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.    சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு…

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு  திருவிழாவையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 

 

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும்.  மேலும் விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டியும் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

அந்த வகையில், பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு  திருவிழாவையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று (மார்ச்.13) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார்.

மார்ச் 25 ஆம் தேதி 10 ஆம் நாள் திருவிழாவன்று பம்பையில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.  அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.  இதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.  பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.