பரமக்குடி ஸ்ரீமுத்தலாம்மன் பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வண்டி மாகாளி வேட ஊர்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் குல சத்திரியர் பேரவை சார்பில் வண்டி மாகாளி வேடம் நடைபெற்றது. இதில் சூரசம்ஹரா விழாவை முன்னிட்டு சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என தங்களை அலங்காரம் செய்து மாறுவேடங்களில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறுவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி புலி வேடம் போட்டு விதவிதமான வேடங்களில் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினார். மஷாசுரமர்த்தினி அம்மனுக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதணை பூஜைகள் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.
இறுதியாக சின்னக்கடை தெருவிலிருந்து இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியில் காளி அவதாரம் எடுத்த பக்தர்கள் இரட்டை மாட்டு வண்டிகளில் உச்சியில் அமர்ந்து கொண்டும், நடனமாடியும் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர் இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த வண்டி பள்ளிவாசல் வழியாக சென்றபோது அங்கு குழுமியிருந்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டனர். இச்சம்பவம் பரக்குடி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகள் ஒற்றுமையுடன் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
—அனகா காளமேகன்







