ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு; அரசாணை வெளியீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய…

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கக் குழு அமைத்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளில் திறமை உள்ளதா? அல்லது வெறும் தந்திரங்கள் உள்ளதா? என்பதை ஆராயவும், உயிரிழப்புகள், நிதி இழப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டின் தீய விளைவுகள் குறித்த தரவுகளைத் திரட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஆராய வேண்டும், ஆன்லைனனில் விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் கட்டணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கான அம்சங்களைப் பற்றிய பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும் எனவும், குழுவின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு டிஜிபி உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘”பெற்றோர் தங்கள் ‘குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம்’ என்று உறுதி ஏற்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன, இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்குக் காரணிகள் தேவை? என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1535495708458905601

மேலும், அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்புக் காட்டுவதை விட்டு விட்டு, நிரந்தர தீர்வுக்காக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தைத்  தடை செய்ய அவசரச் சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களைக் காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.