மக்களுக்கு தீங்கு வளைவிக்கும் அலங்காரப்பொருட்கள் தயாரிப்பு ஆலையை அகற்ற கோரிக்கை!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளைத்தை சேர்ந்தவர்…

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளைத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் பழனிச்சாமி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது மகன் சம்பத்குமார் என்பவர்
மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதால் வீட்டிலேயே உள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் குடியிருந்து வரும் ராஜேஷ் என்பவர் கறிதொட்டிகளை எரித்து குடிசைத் தொழில் என்ற பெயரில் குடியிருப்புகளுக்கு நடுவே ரொட்டி தயாரிப்பு நடத்தி வருவதாகவும், சீமான் என்பவர் கண்ணாடி துகள்களைப் பயன்படுத்தி திருமண அலங்கார
பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தனது மகனுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுவதாக ஓட்டுநர் பழனிச்சாமியும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட  ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை
புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குடியிருப்பு பகுதியில் தொழில் செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட
விரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்
எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.