பழனி அருகே கொய்யா வரத்து அதிகரிப்பு – விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

பழனியில் கொய்யாப்பழங்களின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தினந்தோறும்…

பழனியில் கொய்யாப்பழங்களின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தினந்தோறும் பறிக்கப்படும் கொய்யாப் பழங்களை ஆயக்குடி சந்தையில் விற்பனை செய்தும் வருகின்றனர்.

ஆயக்குடியில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் கொய்யாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொய்யா பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.

இதற்கிடையே ஆயக்குடி கொய்யா சந்தையில் ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.