முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், இலங்கை (பி பிரிவு) அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் சுற்றிலேயே ஹாங்காங், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்து 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், பாகிஸ்தான் அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் இந்தியா (ஒரு வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.

இதையடுத்து இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சதாப் கான், நஷிம் ஷா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் XI அணி: முகமது ரிஸ்வான், பாபர் அசாம். பக்கர் ஜமான், இப்தார் அகமது, குஷ்டில் ஷா, ஆஷிப் அலி, முகமது ஹோஸ்னைன், சதாப் கான், முகமது நவாஸ், ஹரிஸ் ராஃப், நஷிம் ஷா. இலங்கை லெவன் அணி: பதும் நிஷங்கா, தனுஷா குணதிலகா, பனுகா ராஜபக்சா, தனஞ்ஜெயா டி சில்வா, குஷல் மெண்டீஸ், தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, மகீஷ் தீக்ஷனா, மதுஷங்கா, சமிகா கருணரத்னே, தில்சன் மதுஷங்கா, மகீஷ் தீக்ஷனா.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

– பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கடைசி விவசாயி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

Arivazhagan Chinnasamy

சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

G SaravanaKumar

நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

EZHILARASAN D