பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கிசர் மாவட்டத்தில் உள்ள யாசின் பள்ளத்தாக்கிற்கு கில்கிட்டிலிருந்து பயணிகள் வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது, மோர்கா பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற வேன், யாசின் ஆற்றில் கவிழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், இரண்டு பெண்கள் உட்பட 10 பயணிகளின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு குழந்தை உட்பட காயமடைந்த மூன்று பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக குபிஸ் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஒன்று உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




