இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம், வெளியான வெறும் 8 நாட்களில் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் 7 நாட்களில் சுமார் ரூ.945 கோடி வசூலித்த இப்படம், 8-வது நாளில் மட்டும் கூடுதலாக ரூ.85 கோடிக்கும் மேல் வசூலித்து ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது. உள்நாட்டுப் பாக்ஸ் ஆபிஸில் 7-வது நாளிலேயே ரூ.500 கோடி நிகர வசூலைத் தாண்டிய இப்படம், 8-வது நாளில் ரூ.1,000 கோடி வசூலிலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.675.05 கோடியும், வெளிநாடுகளில் ரூ.358.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
இப்படம், ரசிகரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




