தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. தற்பொழுது ப.சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்து உள்ளனர். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை இடத்தை பெற மூத்த நிர்வாகியாக உள்ள ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 முறை மக்களவை உறுப்பினராகவும். தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவு பெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடகத்திலிருந்து போட்டியிடுகிறார் நிர்மலா:
பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்திலிருந்தும், மகாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் போட்டியிடுகின்றனர்.