ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் அட்டையை பயன்படுத்துங்கள் என்று ஆதார் நிர்வாகம் கூறியிருந்தது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் திருட்டு தொடர்பாக மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆதார் ஆணையத்தின் பெங்களூர் பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தான் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால், தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக அந்த அறிக்கையை திரும்பப் பெறுகிறோம் என்ரு மத்திய அரசு தெரிவித்தது. மேலும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் அதை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்