பஞ்சாப் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முக்கிய தலைவரும், பாடகருமான சுப்தீப் சிங் சித்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மான்சா மாவட்டம், ஜவகர்கே கிராமம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, மர்ம…

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முக்கிய தலைவரும், பாடகருமான சுப்தீப் சிங் சித்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மான்சா மாவட்டம், ஜவகர்கே கிராமம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெரிந்த நபரை பார்ப்பதற்காக அவர் உதவியாளர்களுடன் அந்தக் கிராமத்துக்குச் சென்றார். அப்போதுதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு வயது 28. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு 424 முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கடந்த சனிக்கிழமை திரும்பப் பெற்றது. இந்த சூழலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு வழங்கக் கோரி முதலமைச்சர் பகவந்த் மானையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் இரங்கல்: சித்து மூஸ் வாலாவின் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையான இசைக் கலைஞராவார். காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டுக்கும் அவரது இழப்பு பேரதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இரங்கல் செய்தியில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.