தமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.







