சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 7வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்குக் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை 6 ரயில்கள் மூலம் 327டன் ஆக்சிஜன் சென்னை வந்தடைந்த நிலையில், நேற்று 7வது ரயில் சென்னை வந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கண்டெய்னர் பெட்டிகள் திருவொற்றியூர் கான்-கார் இறக்குமதி நிறுவனத்தில் இறக்கி பின்னர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.