விலை குறைப்பு நடவடிக்கையால் புதுச்சேரியில் பெட்ரோல் நிரப்ப வெளிமாநில மக்கள் வருகை தருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் மே 1-ஆம் தேதி வரை நடைபெறும் சுகாதாரத் திருவிழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா காலத்தில் 40 சதவீத மருத்துவ சிகிச்சை, தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு பாரபட்சமின்றி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமான வெளிமாநில மக்கள் புதுச்சேரிக்கு வருகை தருவதாகவும்,
இதற்குமுன் மதுக்குடிக்கத்தான் வெளிமாநில மக்கள் புதுச்சேரிக்கு வருவார்கள். ஆனால், தற்போது பெட்ரோல் போட வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றார்கள், ஏனெனில் மக்களை சார்ந்த விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தளவிற்கு நாம் முன்னேறி வருகின்றோம் என பெருமிதம் தெரிவித்த ஆளுநர் தமிழிசை எல்லாவற்றிற்கும் புதுச்சேரியை நோக்கி எல்லோரும் வரவேண்டிய நிலைக்கு நம்மை தயார் ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








