ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு

அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா…

அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த மாதம் சித்திரை 2-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடி திருவிழாவில் ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

அண்மைச் செய்தி: ‘‘இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியா என்றால், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – கவிஞர் வைரமுத்து’

இவ்வாறு செய்வதால் ஆண்டு முழுவதும் தங்களுக்கு எவ்வித நோய் நொடியும் ஏற்படாமல் குடும்பம் வளர்ச்சி அடைவதாக, நம்பி ஆண்டுதோறும் ஆடுகளை பலி கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இதனால் தீராத நோய்க்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற அய்தீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்தபடி மேளதாளத்திற்கு ஏற்றவாறு சாமியாடினர். அடுத்த மாதம் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் மறு வனபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.