“காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை” – மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ‘அமரன்’ திரைப்பட புகைப்படத்தை பகிர்ந்து நினைவு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்…

மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ‘அமரன்’ திரைப்பட புகைப்படத்தை பகிர்ந்து நினைவு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’  திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘அமரன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

இந்த திரைப்படத்தில் ” மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டுக்காக உயிர் தாகம் செய்தார். இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘அமரன்’ படக்குழு ‘சல்யூட்டிங் மேஜர் முகுந்த்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/RKFI/status/1783481093460480075

சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை, அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக் கொடி பறக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1783482082335088854?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1783482082335088854%7Ctwgr%5E4ee2a2547c6615d2d5287a4c6bad03b0f4c46927%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2Fmain.jsp

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.