நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம்- பிரதமர் மோடி உரை

நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். 75வது சுதந்திர தினம் நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா…

நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

75வது சுதந்திர தினம்

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் செங்கோட்டைக்கு பிரதமர் மோடி காலை வந்தடைந்தார். அப்போது அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் பிரதமருக்கு முப்படைகள் சார்பில் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி கொடியேற்றினார்..

முப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் காலை 7.30 மணியளவில் செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ.17 1 வி ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி சென்றது.

பிரதமர் உரை

தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்றைய தினம் நமது மூவர்ண கொடி உலகம் முழுவதும் பறக்கிறது. இந்தியாவில் சுதந்திர கொண்டாட்டம் எந்த தடையும் இன்றி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திரத்தை பெற இந்தியர்கள் தங்கள் இன்னுயிர்களை கொடுத்துள்ளனர். இந்த சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் இத்தருணத்தில் நினைவு கூரவேண்டும் என்றார்.

மகத்தான தலைவர்களை தந்த நாடு

சுதந்திரத்துக்ககாக நமது பெண் சுதந்திர போராட்ட வீராங்களைகள் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. நேரு, பட்டேல், சாஸ்திரி, லோகியா உள்ளிட்ட பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தினர். நமது சுதந்திர போராட்டத்தில் பழங்குடி இனத்தலைவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. நம் நாடு பல்வேறு மகத்தான தலைவர்களை தந்த நாடு என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

புதிய தொடக்கம்

இந்த 75வது சுதந்திர தின கொண்டாட்டம் நமது நாட்டின் புதிய தொடக்கம் ஆகும். நமது இந்த சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று. நமது சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டீஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. இந்த சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைத்து வீரர்களுக்கும், தலைவர்களையும் வணங்குவதாக தெரிவித்தார்.

சமுதாயமே நமது பலம்

இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமை ஆகும். பல்வேறு தடைகள் இருந்தும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது. நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம். பல்வேறு மக்களை உள்ளடக்கிய நம்முடைய சமூதாயம் தான் நமது பலம். மூவர்ண கொடி பிரச்சாரம் நமது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டை குறித்த எண்ணம் உலக அளவில் முற்றிலும் மாறியுள்ளது. ஒரு லட்சியம் நிறைந்த நமது சமூகம் தொடர்ந்து முன்னேறுவதற்கு பாடுபடுகிறது.

நான் தான் சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த இந்தியாவின் முதல் பிரதமர். ஆனால் சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களின் வலிகளை நான் உணர்ந்துள்ளேன். எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்று சேர வேண்டும் என்பது தான். அது தான் மகாத்மா காந்தி உடைய கனவான இருந்தது. வளர்ச்சி கிடைப்பதற்காக இன்னமும் நாட்டு மக்களை காத்திருக்கச் செய்ய முடியாது

இலவச தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கொண்டு ஏழைகள் சமுதாயத்தில் மிகவும் கீழ் நிலையில் இருக்கக்கூடியவர்கள் என அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு 200 கோடி தடுப்பூசிகள் என்பது போடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உணர்வு தான் இந்தியாவுடைய பலம். புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை. அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்தில் வருகிறோம்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும்

உலகம் தற்போது தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை இந்தியாவிலிருந்து தீர்வு காண விரும்புகிறது. அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. பெரிய திட்டங்கள் மற்றும் யோசனைகள் மூலமாக மட்டும் தான் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும். எனவே இலக்குகளை மிகப் பெரியதாக வைக்க வேண்டும்.

அமுதப் பெருவிழா நமது ஒற்றுமையை பறைசாற்றியுள்ளது. இந்தியாவின் பெருமை, கலாச்சாரம், மரபுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அடிமைதனம் அகற்றப்பட வேண்டும்

இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை அகற்றப்பட வேண்டும். அனைவலும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். இந்தியாவின் வளர்ச்சிக்கான இலக்குகள் முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. நாம் இலக்குடன் பயணத்தை தொடங்கும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்தியா தற்போது உற்பத்தியின் மையபுள்ளியாக திகழ்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.