தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி நாடு முழுவதும் வீடுகள், கடைகள், பெட்ரோல் பங்குகள் என எங்கு பார்த்தாலும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், டெல்லி கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பை ஏற்று கொண்ட பிறகு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தமிழ்நாட்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திர தினவிழா விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். இதனிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கவர்னர் மாளிகை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய கொடி ஏற்றியதற்கு ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்