தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலி

எகிப்து நாட்டு தேவாலயத்தில் பயங்கர தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.   எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு தோறும் சிறப்பு ஆராதனை நடைபெறுவது…

எகிப்து நாட்டு தேவாலயத்தில் பயங்கர தீவிபத்தில் சிக்கி
குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு தோறும் சிறப்பு ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த தேவாலயத்தில் தொழிலாளர்கள் பலரும் ஞாயிற்றுக்‍கிழமை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தேவாலயத்தில் இருந்தவர்களில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ​என்றும், மின்கசிவே தீ விபத்துக்‍கு காரணம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்‍கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்‍கை மேலும் அதிகரிக்‍கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.