முக்கியச் செய்திகள் தமிழகம்

சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிமுக உட்கட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டாக இன்றும் நாளையும் சேலம், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆகியவற்றிற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

சேலத்தில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உட்பட 60 வட்டக் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அதிமுக உட்கட்சித் தேர்தல் முறைப்படி நடைபெற்று வருவதாக அதிமுக தேர்தல் ஆணையர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

Microsoft நிறுவன ஊழியர்களுக்கு தலா ₹1.12 லட்சம் போனஸ்

Jeba Arul Robinson

நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்

Gayathri Venkatesan