தாய் கிழவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

தாய் கிழவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ”தாய் கிழவி”. அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியிருந்த இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணி கதையான இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியா நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ராதிகாவின் நடிப்பும் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில் தாய் கிழவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் ஜியோ ஹாஸ்டாரின் வரும் (ஏப்) 10 ஆம் தேதி வெளியாகிறது.’

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.