இந்தி,ஆங்கிலத்தில் உருவாகும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’!

நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்து மற்றும் தயாரித்து கடந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைப்படமாக வெளியாகவுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 20-ம்…

நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்து மற்றும் தயாரித்து கடந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு 20-ம் தேதி இப்படம் வெளியிடப்பட்டது. எழுத்து,இயக்கம், தனி நடிப்பு மற்றும் தயாரிப்பிற்காக இந்த படம் ஆசியா ‘புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ உள்ளிட்ட சாதனை புத்தகங்களில் இடம் பெற்றது.

தனி நடிப்பில் உருவான உலகின் பதின்மூன்றாவது படமாகவும், ‘தி கார்ட்’ படத்திற்கு பிறகு ஒரே நடிகரைக் கொண்ட இரண்டாவது தென்னிந்திய திரைப்படமாகவும் இப்படம் சாதனைப்புரிந்துள்ளது.

இந்த படத்திற்கு உலகெங்கிலும் சிறப்பான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. பல விருதுகளுக்காகவும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது ‘ஒத்த செருப்பு’. மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பார்த்திபன் தன் இன்ஸ்டாகிராம் பதிவில் ,”என் தமிழ் அழகு, என்னை கூடுதல் அழகாக்குவது தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு. ‘ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே’ But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால், இரு மொழிகளிலும் அறிவும் ,ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assitant (பால் பாகுபாடில்லை)தேவைப்படுகிறார். ஈடுபாட்டுடன் பணிபுரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்க” என்று பகிரிந்துள்ளார்.

இந்த பகிர்வை பார்த்து பலரும் பணம் கூட தேவையில்லை நாங்கள் வருகிறோம் என்று கூறியிருந்தனர், இதற்க்கு பார்த்திபன் தன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறாக பதிவிட்டுள்ளார்.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.