திமுக மாநிலங்களவை குழுத்தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலராக உள்ளார். இவரது கார் மீது ஜூன் 11-ம் தேதி தனியார் பேருந்து மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், சேதமடைந்த தனது காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ம் தேதி கடத்திச் சென்றதாக சூர்யா சிவா மீது திருச்சி கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன்,”சூர்யா சிவாவுக்கு,
10 ஆயிரம் மதிப்பிலான இருநபர் பிணையம் வழங்க வேண்டும். தினமும் காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோண்ட்மெண்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் ” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
– இரா.நம்பிராஜன்