தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில்  இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட  6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் பரவலாக…

தமிழ்நாட்டில்  இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட  6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை குறித்து வானிலை மையம் சார்பில்  வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இதையும் படியுங்கள்:ஆர்.ஜே.பாலாஜி ஹீராவாக நடிக்கும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்!

தமிழ்நாட்டில்  இன்று 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,  அரியலூர்,  திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.