முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் பெய்து வரும் திடீர் மழையால் கடந்த இரு தினங்களில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரெனத் தொடங்கிய மழை இன்று வரை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெய்து வரும் திடீர் மழையால் கடந்த இரு தினங்களில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் சாலையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதியை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், “திடீரென பெய்த மழை காரணமாக சென்னை சாலைகளில் தேங்கிய மழையை ஓரளவு வெளியேற்றியுள்ளோம். இப்பணி இரவுக்குள் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

மேலும், “குளங்கள் மற்றும் நீர்வரத்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அடுத்த மழைக்குள் பணிகளை முடிக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகள் எந்த பணிகளும் நடைபெறவில்லை. பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால்தான் நேற்று சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

“நேற்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல புதுச்சேரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதியை பொறுத்த அளவில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சமஸ்கிருதத்தில் உறுதி மொழி – விளக்கம் கேட்டு நோட்டீஸ் ?

Ezhilarasan

சென்னை: குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள்

Saravana Kumar

ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்

Vandhana