மாநிலங்கள் எதிர்ப்பு: ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீதாராமன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீதாராமன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி 5%லிருந்து 12% ஆக உயர்த்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும், எஃகு, தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றும் இறக்குமதி வரி கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநில நிதியமைச்சர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்தனர். இந்நிலையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சீதாராமன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல ரூ.1,000க்கும் மேலான விலை மதிப்புடைய காலணிகள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிறுத்திவைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஜிஎஸ்டி உயர்வு, பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் ஈரோடு உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ல் உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.