அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரம், வைகைச் செல்வன், என்.ஆர். சிவபதி, வேடச்சந்தூர் பரமசிவம் உள்பட 7 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாதவது:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் கா.சங்கரதாஸ், கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.