தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,803 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது குரங்கம்மை நோய் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 79க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில சுகாதாத்துறை தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பொதுஇடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்த விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,803 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 35,37,922 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை பாதிப்பை விட குறைவாகும்.
மேலும், ஒரே நாளில் 2,233 பேர் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 34,85,579 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது







