முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் அறிக்கை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூது, தமிழக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமீம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முதலமைச்சர், துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட நான்கு தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியுள்ளதாகவும் கூறினார்.

Advertisement:

Related posts

என்னா அடி.. சக வீரர்களிடம் சொன்னதை செய்த இஷான் கிஷன்

Gayathri Venkatesan

விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

Gayathri Venkatesan

‘RRR’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Gayathri Venkatesan