பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் தங்கியுள்ள அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் விமானநிலையம் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சென்றார். இன்று இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசியல் நிலவரம், அதிமுக – பாஜக கூட்டணி, மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்தித்த பின் பாஜக மூத்த தலைவர்களை ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.