அஜித்துக்கு ஓபிஎஸ், அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி ரசியல் கட்சி தலைவர்களும், நடிகர், நடிகைகளும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் AK என்றும் தலை என்றும்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி ரசியல் கட்சி தலைவர்களும், நடிகர், நடிகைகளும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் AK என்றும் தலை என்றும் அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமாரின் பிறந்தநாள் இன்று. உழைப்பாளர் தினத்தில் பிறந்த அவர், உழைக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவு நாயகனாக உயர்ந்துள்ளார்.

அவரது பிறந்த தினமான இன்று அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1520423632904007681

அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஜெயலலிதாவின் முழு ஆசியை பெற்றவரும், சமூக கருத்துக்களை எண்ணற்ற‌ இளைஞர்களுக்கு ‘வலிமை’ போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்து நல்வழிப்படுத்தும் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1520628314762715136

மேலும் அருண்விஜய், சிவகார்த்தியேன் போன்ற நடிகர்களும், தயாரிப்பாளரான போனி கபூர் உள்ளிட்ட திரைபிரபலங்களும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.