நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் வேளாண்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்ற அப்பாவு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற முடியாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எத்தனையோ மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது பாஜக அரசு. அதேபோல் இந்த முறையும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்து அந்த மசோதாவை நிறைவேற்ற விட மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார். இதனிடையே பெண் ஒருவர் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.