ரிலீஸ் தேதியில் மாற்றம்…. முன்கூட்டியே வெளியாகும் ’லீடர்’…….!

லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகியுள்ள லீடர் திரைப்படத்தின் ரீலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’லீடர்’. எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ’லீடர்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி லீடர் திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதியே தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.