திருமணம் முடிந்த கையோடு எம்ஜிஆர் சிலையிடம் ஆசீர்வாதம் பெற்ற புதுமணதம்பதி!

பாளையங்கோட்டையில் மகன் திருமணம் முடிந்த கையோடு எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் மணமக்களுடன் அவரின் சிலை முன் ஆசீர்வாதம் பெற்று சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சப்பாணி. 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருந்து…

பாளையங்கோட்டையில் மகன் திருமணம் முடிந்த கையோடு எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் மணமக்களுடன் அவரின் சிலை முன் ஆசீர்வாதம் பெற்று சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சப்பாணி. 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருந்து வரும் இவர், வட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். எம்ஜிஆர் மேல் அதிக பற்று கொண்ட இவர், கொக்கிகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தனது சொந்த செலவில் நாள்தோறும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்.

இந்நிலையில், சப்பாணியின் மகன் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன மணமக்களோடு கொக்கிகுளம் சென்ற அவர்கள், எம்ஜிஅர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இந்த செயல் அக்கட்சியினரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.