முக்கியச் செய்திகள் இந்தியா

எதிர்கட்சிகள் ஒன்றிணைக்க முயற்சி; சோனியா காந்தியுடன் நிதிஷ்-லாலு சந்திக்க திட்டம்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாஜக அல்லாத எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கும் நோக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். அவர் பிரதமர் வேட்பாளராகும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், தனக்கு பிரதமராகும் விருப்பம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தவிர்த்து வேறு சில விசயங்களும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி ராஷ்டீரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி, சோனியா காந்தியிடம் இருந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றிய ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கான ஒப்புதலை பெறுவதற்கான உறுதிமொழியை எங்களது தலைமை கேட்டு பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

EZHILARASAN D

எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்

EZHILARASAN D

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!