மார்வெல் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனாலே இப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கச் சம்மதித்திருப்பார் எனக் கூறப்படுகிறது.
பாகுபலி, RRR உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ராஜமௌலி. இந்திய அளவில் மட்டும் தன் படங்களைக் கெண்டு செல்லாமல் உலகில் பல பகுதிகளிலும் தனது திரைப்படங்கள் மூலம் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாகத் தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜமௌலி. எப்போதும் பீரியட் படங்களை மிகப் பிரம்மாண்டமாக எடுக்கும் ராஜமௌலி தற்போது எந்த கதைக்களத்தை எந்த காலகட்டத்தில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் ராஜமௌலி – மகேஷ்பாபு இணையும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பேவரைட் சூப்பர்ஹீரோவாக வலம் வரும் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் சமீபத்தில் இவர் நடித்ததோர் லவ் அண்ட் தண்டர் வெளியாகி அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
பொதுவாக மார்வெல் படங்களின் தாக்கம் இந்தியாவில் பெருமளவில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மார்வெல் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனாலே இப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கச் சம்மதித்திருப்பார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







