முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு


மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.பின்பு அந்த மூன்று வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.


இதனை அடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்த நிலையில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளியில் நடைபெற்ற நேற்றைய விசாரணையின்போது மேலும் சில லேப்டாப் , பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நல்லடக்கம்!

Halley karthi

புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!

Halley karthi

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

Halley karthi