நீலகிரியில் பூத்து குலுங்கும் ஜப்பான் தேசிய மலரான செர்ரி ப்ளாசம்…!

உதகையில் ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூக்க தொடங்கியுள்ளதை ஆர்வமாக பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி…

உதகையில் ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூக்க தொடங்கியுள்ளதை ஆர்வமாக பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூக்க தொடங்கி உள்ளது. வசந்த காலத்தில் பூக்கும் இந்த மலர்கள், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை இலைகள் உதிர்ந்து மரம் முற்றிலும் பூவாக காட்சியளிக்கும். இந்த பூக்கள் ஜப்பான் நாட்டின் தேசிய மலராகும்.

வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சக்குரா பூக்கள் என்றும்
தமிழகத்தில் அழைக்கின்றனர். இந்தியாவில் இமயமலை போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குளிர் காலத்தில் அதிகமாக இந்த பூக்கள் பூக்கின்றது. அட்லாண்டாவில் ஆண்டுதோறும் செர்ரி பூ ப்ளாசம் திருவிழா நடத்துகின்றனர்.

30 அடி உயரம் வரை மரங்களில் பூத்து குலுங்கும் செர்ரி பூக்களை தேடி தேனீக்கள், சிட்டுக்குருவிகள், அணில்கள் போன்றவை உணவுக்காக தேடி வருகின்றன. இப்பூக்களில் இருந்து ஷாம்பு சென்ட் போன்ற வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும். மேலும், இந்த பூக்கள் மருத்துவ குணமும் கொண்டவையாகும்.

சுற்றுலா பயணிகளை கவரும் இந்த பூ மரங்களை வனத்துறை மூலம் சாலையோரங்களில்
நடவு செய்து வளர்க்கின்றனர். சாலை ஓரங்களில் அழகாய் காட்சியளிக்கும் இந்த
பூக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதனை
சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகை படங்களும் எடுத்து செல்கின்றனர்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.