திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து, 34 லட்சம்
ரூபாய் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி
கோயிலில், நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 34 லட்சத்து
98 ஆயிரத்து 171 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 126 கிராம், வெள்ளி 2 கிலோ
654 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில்
உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஆடி மாதத்திற்கான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில்,
ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும்
கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கு. பாலமுருகன்







