மலையாள இலக்கிய உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால், தமக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை தாம் தவிர்க்க விரும்புவதாகவும், தமது உண்மைத்தன்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். விருதை திருப்பி அளிப்பதுடன், தமக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையான 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ள வைரமுத்து, தனிப்பட்ட முறையில் 2 லட்சம் ரூபாயை, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும், என்றும் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஓஎன்வி விருதைத் திருப்பி அளித்துள்ள நிலையில் அவருடைய மகன் கரன் கார்க்கி ட்விட்டர் பக்கத்தில் ‘ என் தந்தை மீது புகார்கள் தெரிவிப்பவர்கள் அதனைச் சட்ட ரீதியாக நிரூபிக்கட்டும். நான் என் தந்தையை நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.