முக்கியச் செய்திகள் தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய விருது!

மலையாள இலக்கியத்தில் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது

மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ. என். வி. இலக்கிய விருது கருதப்படுகிறது. இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓ.என்.வி. குரூப் நினைவாக இந்த விருது கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவிற்கு ONV இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மொழி அல்லாத தமிழ் இலக்கியவாதிகளில் ONV விருதை பெறும் முதல் கவிஞர் என்ற பெருமையை வைரமுத்து பெற்றுள்ளார்.

பொதுவாக ஞானபீடம் பெறும் கவிஞர்களுக்கே ONV இலக்கிய விருது வழங்கப்பட்டு வரும் சூழலில்,
வைரமுத்துவின் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

“மக்களுக்கு சிறு துன்பம் என்றாலும் எனது குரல் எதிரொலிக்கும்”- கமல்ஹாசன்!

Jayapriya

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

Jayapriya

ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Ezhilarasan