விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்துள்ளதாகவும், இன்னும் ரத்து செய்யவில்லை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், கடைசி நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமி நாடகம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது என்றும், இன்னும் ரத்து செய்யவில்லை எனவும் அவர் விமர்சித்தார். விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அதிமுக அரசு தான் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால் தேர்தலுக்கா, சுயநலத்திற்காக கடன்களை ரத்து செய்கிறார், விவசாயிகளுக்காக செய்யவில்லை. பச்சை துரோகம் நாடகத்தை அறியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள் என்று விமர்சித்தார்.
மேலும், குறைகள் சூழ்ந்த தமிழ்நாடாக உள்ளது தமிழகம். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இதனை தீர்க்கவில்லை, புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.







