சென்னை பல்லாவரம் அரசு மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் வெள்ளிக்காசுகள் மற்றும் 100 வது நாளாக மாலை நேர சிற்றுண்டி வழங்கி முன்னாள் மாணவர்கள் நெகிழ வைத்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தில் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
இம்மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைந்து 100வது நாளாக மாலை நேர சிற்றுண்டி வழங்கி வருகின்றனர்.மேலும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் மாதிரி தேர்வு ஒன்றையும் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 5கிராம் அளவிலான வெள்ளிக் காசுகளையும்,இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு 4கிராம் வெள்ளிக் காசும்,மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 3கிராம் அளவிலான வெள்ளிக் காசும் வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து பாடத்திலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2கிராம் அளவிலான வெள்ளிக் காசுகளும் வழங்கப்பட்டது.மொத்தம் 102 மாணவர்களுக்கு வெள்ளிக் காசுகள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மாலை நேர சிற்றுண்டி இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-வேந்தன்