முக்கியச் செய்திகள் குற்றம்

ஆன்லைன் ரம்மி விபரீதம்; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரத்தை அடுத்த சேந்தனூரை சேர்ந்தவர் பச்சையப்பன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தை உள்ளனர். கடந்த ஒருவாரத்திற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.5 லட்சம் அளவிற்கு இழந்ததாக தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு வீட்டிலேயே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பச்சையப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தூக்கில் தொங்குவதை கண்ட மனைவி புஷ்பா கதறி அழுதியதை தொடர்ந்து அக்கம்பக்கதினர் வீட்டிற்குள் சென்று பார்த்துவிட்டு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட 5 லட்சம் அளவிற்கு அவர் கடன் வாங்கியதும், அந்த பணத்தை விளையாட்டில் இழந்ததால், மன வேதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Advertisement:
SHARE

Related posts

தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

Halley karthi

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Halley karthi

பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்

Gayathri Venkatesan