முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டுமென பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை முகப்பேரில் நடந்துவரும் தமிழ்நாடு பேட்மிட்டன் லீக் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கிய உற்சாகப்படுத்தினார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக வீரர் வீராங்கனைகள் இறகுப்பந்து போட்டியில் அதிக அளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். தமிழக அரசு இறகுப்பந்து வீரர்களுக்கு அதிகளவில் அரங்கங்கள்
ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஒரு பெருமை சேர்க்கும். சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு அரசு அதிக அளவில் நடத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரித்து வரும் தற்கொலைக்கு தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அவர் அளித்த வாக்குறுதிகளில், ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றனர் . தேர்தல் நேரத்தில் அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என பேசினார்

Advertisement:
SHARE

Related posts

வன்முறையை ஒருபோதும் நான் விரும்புவதில்லை : மமதா பானர்ஜி

Ezhilarasan

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

Vandhana

குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!

Niruban Chakkaaravarthi