முக்கியச் செய்திகள்

ஆதாரங்களுடன்தான் நடிகர்கள் பற்றி பேசுகிறேன்: நடிகர் பயில்வான் ரங்கநாதன்

நடிகர், நடிகைகள், சினிமா பிரமுகர்கள் குறித்து தக்க ஆதாரங்களுடன்தான் பேசி வருகிறேன் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள தன்னைப் பற்றி முற்றிலும்
தவறாகவும், பொய்யாகவும் பேசி வரும் சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன்
புகார் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராதிகா என்னை திருவான்மியூரில் அடித்தார்கள். ஆனால், ஆவர் பெசன்ட் நகர் என்று சொல்லியது தவறு. எனக்கு செய்தி எழுதக் கற்று கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்றும், என்னை வாழவைப்பது யூடியூப் சேனல் மட்டுமே என்றும் கூறினார்.

மேலும், ராஜன் கூறுவது முற்றிலும் பொய். நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடமும் பணம் வசூலித்ததில்லை. மேலும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும், செய்திகளையும் சமூகவலைதளங்களில் பேசி வருகிறேன். எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன். வேறு தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவிப்பதில்லை என்றார்.

என் மீது புகார் கொடுத்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், பல விழாக்களிலும்,
சேனல்களிலும் தொடர்ந்து அருவருப்பாகவும் தரக்குறைவாகவும் பேசியும், என்னை
மிரட்டியும் வருவதாக ராஜன் மீது குற்றம்சாட்டினார்.

நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன்
கொலை வழக்கு வரை பேசியுள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருகிறேன். மக்கள் அதற்குப் பெருமளவு
ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், எனக்கு தனிப்பட்ட யூடியூப் சேனல் எதுவும் இல்லை. நான் பிற யூடியூப் சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் மட்டுமே பங்கேற்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் யூடியூப் சேனலிலும் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அதில் நான் தவறாகப் பேசியிருந்தால் அவர் என்னை தொடர்ந்து பேச அனுமதிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
SHARE

Related posts

‘மெக்காஃபே’ நிறுவனர் ஜான் மெக்காஃபே தற்கொலை

Vandhana

“இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்கும் முயற்சி” – சுகிர்தராணி

Halley Karthik

“ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு”- கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்

Saravana Kumar